dinamalar telegram
Advertisement

கோவில்கள் இடிக்கப்படாதுகலெக்டர் உறுதி

Share
மைசூரு-மைசூரின் கோவில்களை இடிக்கும் விஷயத்தில், பொதுமக்கள், ஹிந்து அமைப்பினரின் நெருக்கடிக்கு அரசு பணிந்துள்ளது. அரசின் உத்தரவுபடி, கோவில்களை இடிக்கும் பணியை, மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்திஉள்ளது.இது குறித்து, மைசூரு மாவட்ட கலெக்டர் பகாமி கவுதம், நேற்று கூறியதாவது:ஏற்கனவே இடிக்கப்பட்ட கோவில்கள் பற்றி விளக்கம் கேட்டு மாநில அரசு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.எனக்கும், தாசில்தாருக்கும் நோட்டீஸ் வந்துள்ளது. இதில் என்னவுள்ளது என்பதை, பகிரங்கப்படுத்த முடியாது; நோட்டீசுக்கு விளக்கம் அளிப்போம்.அரசின் உத்தரவுபடி, கோவில்கள் இடிக்கும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை, எந்த கோவில்களும் இடிக்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement