dinamalar telegram
Advertisement

பெண் தீக்குளிக்க முயற்சி

Share
கடலுார்-கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் எம்.பி., அலுவலகத்திற்கு நேற்று பகல் 1:00 மணியளவில் புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர், எஸ்.பி., அறைக்கு அருகில் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதனால் பதறிப்போய் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெண்ணிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.விசாரணையில், தீக்குளிக்க முயன்றவர் விலங்கல்பட்டு அடுத்த வானமாதேவியை சேர்ந்த பச்சைமுத்து மனைவி அம்சவல்லி, 48; என தெரிவித்தார். தனது கணவரின் சகோதரர் சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட காவல் சரகம் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எஸ்.பி., அலுவலக நுழைவாயில் மற்றும் எஸ்.பி., அலுவலகம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டும் எஸ்.பி., அறைக்கு அருகிலேயே பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement