dinamalar telegram
Advertisement

கடலுார் துறைமுக விரிவாக்கப் பணிவிரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

Share
கடலுார்-கடலுார் துறைமுக விரிவாக்க பணியை, 1 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார்.கடலுார் துறைமுகத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு மூலம், சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ. 135 கோடியில் விரிவுபடுத்தும் பணி, அக்டோபர் -2018 ல் துவங்கி நடந்து வருகிறது.இத்திட்டத்தில்,இரண்டு புதிய சரக்கு கடல் தளங்கள் மற்றும் 5.68 மெட்ரிக் டன் ஆண்டொன்றுக்கு சரக்கு கையாளும் திறன் கொண்டதாக அமைய உள்ளது.இப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கலெக்டர் பாலசுப்ரமணியம் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பணியை வரும் அக்டோபர் 2021-க்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.ஆய்வின்போது தமிழ்நாடு கடல்சார் வாரிய செயற்பொறியாளர் ரவிபிரசாத், துறைமுக கண்காணிப்பாளர் ஜெபருல்லாகான், கடல்சார் வாரிய அலுவலர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement