dinamalar telegram
Advertisement

பைக் திருடியவர்  கைது

Share
ஸ்ரீமுஷ்ணம் -ஸ்ரீமுஷ்ணம் அருகே பைக் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கலியங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன், 34; இவர் கடந்த மாதம் 31ந்தேதி நாச்சியார்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது பைக் திருடுபோனது.ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கூடலையாத்துார் பகுதியில் ரோந்து சென்றனர்.சிவன் கோவில் அருகே நின்றிருந்த நபரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அவர், அகர ஆலம்பாடியைச்சேர்ந்த சுந்தரம் என்கிற ராஜ சுந்தரமூர்த்தி, 27, என்பதும், நாச்சியார்பேட்டையில் பைக்கை திருடியதும் தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement