dinamalar telegram
Advertisement

தமிழக மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

Share
திட்டக்குடி-திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் மாநில துணைச்செயலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் பேரின்பம் பங்கேற்று தீர்மானங்கள் குறித்து விளக்கிப்பேசினார்.மாநில பொருளாளர் பாண்டுரங்கன், ஒன்றிய நிர்வாகிகள் சின்னஏட்டு, சுரேஷ்குமார், பழனிமுத்து மற்றும் கிளைநிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க தமிழக அரசை வலியுறுத்துவது, இயல் இசைக்கலைஞர்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்களை முறையாக கொண்டு சேர்க்க பாடுபடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement