dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை பிறந்த நாள்.......

Share
நெய்வேலி-மறைந்த முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா நெய்வேலியில் தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது.நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25, தொ.மு.ச., ரவுண்டானாவில் உள்ள அண்ணாதுரை மற்றும் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தனர்.நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றியக்குழு சேர்மன் சபா பாலமுருகன், தொ.மு.ச., தொழிற்சங்க தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் பாரி, பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, நெய்வேலி நகர பொறுப்புக்குழு தலைவர் பக்கிரிசாமி, முன்னாள் நகர செயலாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, தொ.மு.ச., மாவட்ட கவுன்சிலர் பொன்முடி, நன்மாற பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement