dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..

Share
கடலுார்-கடலுாரில் தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கடலுார் நகர தி.மு.க., சார்பில், மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, ராஜேந்திரன், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், அரிமா சங்க தலைவர் தினகரன், வி.ஆர்.அறக்கட்டளை விஜயசுந்தரம் பங்கேற்றனர்.அ.தி.மு.க., சார்பில், கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, முன்னாள் அமைச்சர் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சேவல்குமார், ஒன்றிய குழு தலைவர் பக்கிரி, விவசாயி பிரிவு காசிநாதன், மீனவரணி தங்கமணி, மாவட்ட இளைஞரணி மாதவன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி தஷ்ணா, நகர துணை செயலாளர் கந்தன் பங்கேற்றனர்.ம.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை சிலைக்கு, மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் அய்யப்பன், லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement