dinamalar telegram
Advertisement

ரூ.20 கோடி: மீட்கப்பட்ட கோவில் இடங்களின் மதிப்பு.. இந்து சமய அறநிலையத்துறை அதிரடி

Share
Tamil News
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்குட்பட்ட கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து மீட்க அரசு உத்தரவிட்டது.

மாவட்டம் வாரியாக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், வணிக வளாகங்கள், குளங்கள் தனிநபர்களின் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.கடலுார் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 1,646 கோவில்கள் உள்ளன. இதில், 236 பெரிய கோவில்அதிக வருமானம் உள்ளவை ஆகும்.மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட 10 தாலுக்கா வாரியாக எந்தெந்த கோவில் கட்டுப்பாட்டில் நிலங்கள், கட்டடங்கள், வணிக வளாகங்கள், குளங்கள் உள்ளது.இவைகளின் மதிப்பு, இவற்றில் எந்தெந்த இடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது என கண்டறிய தலா 10 குழு அமைக்கப்பட்டு, ஆய்வு பணி நடந்து வருகிறது.

கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் ஆய்வில் இதுவரை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பது தெரிந்ததுஅதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ரூ. 20 கோடி மதிப்பிலான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இவைகள் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் ஆக்கிரமிப்பு கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    யார், எப்பொழ்து ஆக்ரமித்தார்கள். யாரிடம் இருந்து மீட்டார்கள். இத்தனை நாட்கள் அறநிலையத்துறை என்ன ஆணி பிடுங்கி கொண்டு இருந்தனர். கோவில் நிதியில் இருந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் ஏன் இன்னோவா கார் வாங்கப் பட்டது. துறை சார்பாக நடக்கும் கூட்டங்களில் கோவில் நிதியில் இருந்து உணவு, ஸ்வீட், காரம், காபி ஏன் வாங்கப் பட்டது. ஆக்ரமிக்கப் பட்ட நிலத்தில் இருந்து இதுவரை எவ்வளவு வருவாய் ஈட்டப் பட்டது ? பக்கா டிராமா காண்பிக்கிறார்கள் திமுக வினர்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    அதிரடி அது சரவெடி. உலக மகா நடிப்பு டா சாமி. பெண்மீட்பு பணியை போலவே , கடவுளே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டடிருக்கிறது அறநிலைய துறை. சிங்கத்தை சீண்டினால் சீறத்தான் செய்யும்.

Advertisement