dinamalar telegram
Advertisement

சில்வர் பீச் வியாபாரிகள் மனு

Share
கடலுார்-கடலுார் சில்வர் பீச்சில் மீண்டும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டுமென கூறி சிறு வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.இதுகுறித்து கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், சுவாமி விவேகானந்தர் கடல் தாய் சிறு வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் அளித்த மனு:கடலுார் சில்வர் பீச்சில் 100க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளோம். கொரோனா பரவல் குறைவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.ஆனால், கடைகளை திறக்க போலீசார் அனுமதி வழங்குவதில்லை. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் உள்ளோம். மீண்டும் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement