dinamalar telegram
Advertisement

மருதுார் ஊராட்சியில் வேலை வாய்ப்பு முகாம்

Share
Tamil News
மேட்டுப்பாளையம் : மருதுார் ஊராட்சியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 9 பேருக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மருதுார் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, நேற்று வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த, 65 பேர் பங்கேற்றனர். ஒன்பது தொழில் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, இளைஞர், இளம் பெண்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டன.இறுதியில், 9 நபர்களுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டன. மேலும், வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்த, 25 நபர்களின், சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெறுகின்றன.இதுகுறித்து ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் கூறுகையில், "படித்து முடித்து வேலையில்லாமல் உள்ளவர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த, முகாம் நடத்தப்பட்டது. ஊராட்சியில் தொடர்ந்து இது மாதிரியான முகாம்கள் நடத்தப்படும். ஊராட்சியில், 46 மகளிர் குழுக்கள் செயல்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக, 20 மகளிர் குழுக்கள் துவங்கி, அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க, ஏற்பாடு செய்யப்படும். தொழில் பயிற்சி முடிந்த பின்பு, அவர்களுக்கு தொழில் துவங்க, கடன் பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்யப்படும். கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் சார்பில், சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து, 3 நபர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது," என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement