dinamalar telegram
Advertisement

குடியிருக்க நிரந்தர இடம்கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை....

Share
கடலுார்-குடியிருக்க நிரந்தர இடம் கேட்டு, கடலுார் அருகே ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் சாலை விரிவாக்கப்பணிக்காக, நத்தவெளி ரோட்டில் குடியிருந்த 74 வீடுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு திருமாணிக்குழியில் மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு செல்ல அவர்கள் மறுத்துவிட்டதால், ஊராட்சி தலைவர் சரவணன் முயற்சியால், அதே ஊராட்சிக்குட்பட்ட கெடிலம் ஆற்றங்கரையொட்டி அரசு இடத்தில் தற்காலிகமாக மாற்று இடம் வழங்கப்பட்டது.அங்கு அவர்கள் குடியிருந்துவரும் நிலையில், அப்பகுதியில் நகராட்சி சார்பில் குப்பை கொட்டப்பட உள்ளதாக தெரிகிறது. இதையறிந்த அப்பகுதியில் குடியிருப்பவர்கள், தங்களுக்கு நிரந்தர மாற்று இடம் கேட்டும், தற்போது குடியிருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் பாதிரிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த கடலுார் தாசில்தார் பலராமன், ஊராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரிசிபெரியாங்குப்பத்தில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement