dinamalar telegram
Advertisement

பண்ருட்டியில் பைக் திருடன் கைது

Share
பண்ருட்ட-பண்ருட்டியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த சின்னபகண்டை கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன்,28. இவர் கடந்த 12ம் தேதி தென்பெண்ணையாற்று கரையோரம் தனது பைக்கை நிறுத்தி விட்டு வாக்கிங் சென்றார். பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று புலவனுார் தென்பெண்ணையாற்றில் ரோந்து சென்றனர்.அவ்வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், திருவதிகை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார், 25, என்பதும், அய்யனார் சின்னபகண்டையில் பைக்கை திருடியதும், திராசு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணியனிடம் 2,000 ரூபாய் வழிப்பறி செய்தும் தெரியவந்தது.இவர் மீது புதுப்பேட்டை, நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் தலா ஒரு பைக் திருட்டு வழக்கு உள்ளது. அய்யனாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 650 ரூபாய் மற்றும் மூன்று பைக்குகள், கத்தி, மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement