dinamalar telegram
Advertisement

டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

Share
நெல்லிக்குப்பம்-பண்ருட்டி - கடலுார் சாலையில், நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரத்தில் தனியார் இடத்தில், தனியார் நிறுவனம் ஒன்று மொபைல் போன் டவர் அமைக்க முடிவு செய்திருந்தது. இதற்கான பணிகளை இரண்டு நாட்களுக்கு முன் துவக்க முயன்றனர். அப்பகுதி மக்கள் எதிர்ப்பால், பணியை துவக்கவில்லை.டவர் அமைக்க பாதுகாப்பு கேட்டு, தனியார் நிறுவனத்தினர் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகனிடம் மனு அளித்தனர். அதையடுத்து, அப்பகுதி மக்களையும் டவர் நிறுவனத்தையும் அழைத்து இன்ஸ்பெக்டர் அசோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடலுார் மாவட்டத்தில் எங்கு டவர் அமைத்தாலும், அந்த ஊராட்சி தீர்மானமும், கலெக்டர் அனுமதியும் பெற வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டதற்கான ஆதாரங்களை மக்கள் காண்பித்தனர். அதையேற்று கலெக்டரிடம் அனுமதி பெற்று வந்து டவர் அமைத்து கொள்ளும்படி இன்ஸ்பெக்டர் கூறினார். இதனால் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement