dinamalar telegram
Advertisement

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Share
கடலுார்-பி.எஸ்.என்.எல்., அனைத்து சங்கங்கள் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு செயலர் சம்பந்தம், ஓய்வூதியர் சங்க மாநில உதவிச் செயலர் முத்துகுமரசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினர். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது.ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பு குழு உதவி செயலர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார். சங்க தலைவர் மதியழகன், உறுப்பினர்கள் ரத்தினம், மேகனாதன், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement