dinamalar telegram
Advertisement

சுறுசுறுப்பு; மாவட்டத்தில் அரசியல் கட்சியினர்...முதல் நாளான நேற்று 19 பேர் மனு தாக்கல்

Share
Tamil News
கள்ளக்குறிச்சி-உள்ளாட்சித் தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., என பிரதான கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், வேட்பு மனு தாக்கல் என தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, ரிஷிவந்தியம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், திருநாவலுார் ஆகிய 9 ஒன்றியங்கள் உள்ளன.இங்கு 19 மாவட்ட கவுன்சிலர், 180 ஒன்றிய கவுன்சிலர், 412 ஊராட்சி தலைவர், 3,162 கிராம வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலையொட்டி மாவட்டம் முழுதும் 1,889 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

4 லட்சத்து 83 ஆயிரத்து 841 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 77 ஆயிரத்து 887 பெண் வாக்காளர்கள், 186 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 9 லட்சத்து 61 ஆயிரத்து 914 பேர் ஓட்டளிக்க உள்ளனர். இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலையொட்டி தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் வேலு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் நடத்தினார். தேர்தலில் பணிபுரியும் விதம் குறித்து கூறி, கட்சியினை உற்சாகப்படுத்தினார்.அதேபோல், அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்களான மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர்கள் சம்பத், மோகன் ஆகியோர் தனது கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து வேட்பு மனுக்களைப் பெற்றனர். பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.நேற்று ஒரே நாளில் நடந்த மூன்று கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்காக, மாவட்டத்தில் உள்ள தொண்டர்கள் கள்ளக்குறிச்சியில் திரண்டனர்.மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஸ்ரீதர் ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு என கள்ளக்குறிச்சி பரபரப்புடன் காணப்பட்டது.

19 பேர் மனு தாக்கல்தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2 பேர் (சங்கராபுரம் 2வது வார்டு, உளுந்துார்பேட்டை 13வது வார்டு), ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர் (திருநாவலுார் ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டூர்), கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 பேர்( திருக்கோவிலுார்-2, திருநாவலுார்-6, கள்ளக்குறிச்சி - 3, சங்கராபுரம் -1, சின்னசேலம் -3, தியாகதுருகம் -1) என மொத்தம் 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

390 பதற்றமான ஓட்டுச்சாவடிகள்மாவட்டத்தில் 180 பகுதிகளில் உள்ள 390 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பும், தேர்தல் நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement