dinamalar telegram
Advertisement

நாககுப்பம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

Share
சின்னசேலம்-சின்னசேலம் அருகே நாககுப்பம் கிராமத்தைச் தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரி, அப்பகுதி மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட நாககுப்பம் கிராமத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகளுக்கு அருகில் உள்ள பாண்டியன்குப்பம் வருவாய் கிராமத்திலும், மரவாநத்தம் வருவாய் கிராமத்திலும் எல்லையை ஓட்டினாற்போல் விவசாய நிலங்கள் உள்ளன.மேலும், இந்த 2 கிராமங்களிலும், நாககுப்பம் கிராம விவசாய நிலங்கள் 1,000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதேபோல், மக்கள் தொகையிலும், பாண்டின்குப்பம் கிராமத்தை விட, நாககுப்பம் கிராமத்தில் மக்கள் தொகை அதிகம். மேலும், நாககுப்பம் கிராம மக்கள் பட்டா, சிட்டா போன்ற சான்றிதழ்களுக்கு 3 கி.மீ., தொலைவில் உள்ள பாண்டியன்குப்பம் மற்றும் மரவாநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் செல்லும்படி கூறுகின்றனர்.இதனால், மிகுந்த சிரமம் ஏற்படுவதால், நாககுப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் வேண்டும். இல்லையெனில், வரும் அக்டோபர் 9ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பு செய்யப்போவதாக ஊர் பொதுமக்கள் சார்பில் துண்டு பிரசுரம் கிராமத்தில் விநியோகிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement