dinamalar telegram
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

Share
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி தலைமை தாங்கினார். சி.இ.ஓ., விஜயலட்சுமி, டி.இ.ஓ., கார்த்திகா, கொரோனா தடுப்பு அலுவலர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, மருத்துவ அலுவலர்கள் ஜெகதீஸ்வரன், பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, வயிற்றில் புழு உருவாகும் விதம், புழுவினால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வயது வரம்பிற்கேற்ப குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதற்கான அளவு குறித்து விளக்கி மாணவர்களுக்கு மாத்திரை வழங்கப்பட்டது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் சுந்தர்பாபு, சுகாதார ஆய்வாளர்கள் சிட்டிபாபு, கவியரசன், விக்னேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.உதவி தலைமை ஆசிரியர் அருள் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement