dinamalar telegram
Advertisement

முதல் நாளில் 65 பேர் வேட்பு மனு தாக்கல்

Share
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் 65 பேர் மனு தாக்கல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் நேற்று முதல் வேட்பு மனு பெறப்படுகின்றது. இதற்காக, அந்தந்த பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று வேட்பு மனுக்களைப் பெற்றனர்.ஊராட்சி தலைவர் பதவிக்கு கண்டமங்கலம் ஒன்றியத்தில் 1, வானுாரில் 2 மற்றும் மேல்மலையனுாரில் 4 என மொத்தம் 7 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு முகையூர், திருவெண்ணெய்நல்லுாரில் தலா 1, கோலியனுார், கண்டமங்கலத்தில் தலா 8, காணையில் 6, ஒலக்கூரில் 2, வானுாரில் 7, செஞ்சியில் 11, வல்லத்தில் 5, மேல்மலையனுாரில் 9 என மொத்தம் 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் மொத்தம் 65 பேர் மனு தாக்கல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement