dinamalar telegram
Advertisement

துவங்கியது ஊராட்சித் தலைவர் பதவிக்கு பல லட்சம் பேரம்...மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கவனிப்பார்களா?

Share
Tamil News
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட கிராமங்களில், ஊராட்சித் தலைவர் பதவிக்கு, பல லட்சம் ரூபாய் பேரம் நடந்து வருகிறது. இதை கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் 21ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, வார்டு மறுவரையறையால் 2016ம் ஆண்டிற்கான உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் நிறுத்தப்பட்டது.அதன்பின், கடந்த 2019ம் ஆண்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.இந்நிலையில், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நேற்று செப்டம்பர் 15ம் தேதிக்குள், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.அதன்படி, 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13ம் தேதி அறிவித்தது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு 293, கிராம ஊராட்சி தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 5,088 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதில், செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஒன்றியங்களுக்கு வரும் 6ம் தேதி முதல் கட்டமாகவும், காணை, கோலியனுார், மயிலம், மரக்காணம், மேல்மலையனுார், வல்லம் ஆகிய ஒன்றியங்களுக்கு வரும் 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதவியின்றி இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சுயேச்சைகள் தரப்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதேபோன்று, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களிடம் விருப்ப மனு பெற்று, பட்டியலை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.மேலும், கிராமங்களில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டி போடுவதற்கு, அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சுயேச்சைகள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஊராட்சித் தலைவர்கள் பதவியை பிடிக்க, பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்படுகிறது. கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், சுமூக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.கோவில் கட்டுவதற்கும், கிராம பொது செலவிற்கும் பல லட்சம் ரூபாய் செலவிட தயாராக இருப்பதாகவும், பேரம் பேசி வருகின்றனர். இதன் மூலம், ஒரு சில கிராமங்களில், ஓட்டுகளை தங்களுக்கு ஆதரவாக மாற்றி, ஊராட்சித் தலைவராவதற்கு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.ஊராட்சித் தலைவர் பதவிக்கு பேரம் துவங்கியுள்ளதால், கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது. ஆனால், கிராமங்களில் லட்சக்கணக்கில் ஓட்டுக்கு பேரம் பேசுவது துவங்கியுள்ளது.உள்ளாட்சித் தேர்தலில் பேரம் நடப்பதைத் தடுக்க, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அல்லது கிராம உதவியாளர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நமது நிருபர்-
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • S. Narayanan - Chennai,இந்தியா

    கொள்ளை பகள் கொள்ளை ஊருக்கு ஒரு ஊழல்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    மடை திறந்து...... நிழல்கள் பட பாட்டில் இசை என்ற சொல் வரும் இடங்களில் பணம் என்று மாற்றி பாடி பாருங்கள். கவிப்பேரரசு ஒரு தமிழ் பேசும் பணிக்கர்.

Advertisement