dinamalar telegram
Advertisement

இ.எஸ்., பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு விழா

Share
விழுப்புரம்-விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 'பிரஷர்ஸ் டே ' கொண்டாடப்பட்டது.இ.எஸ்., கல்விக்குழுமம் நிறுவனர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். தாளாளர் செந்தில்குமார், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் குறித்து பேசினார். பதிவாளர் சவுந்திரராஜன், முதல்வர் சக்திவேல் வாழ்த்திப் பேசினர்.இதையடுத்து, அரசு வாரிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை, நிறுவனர் சாமிக்கண்ணு வழங்கினார். இயந்திரவியல் துறை தலைவர் ரவி, டிப்ளமோ படிப்பின் பாடத்திட்டம் சிறப்பு தன்மை குறித்தும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் கஜேந்திரன், மூன்றாம் ஆண்டு இறுதியில் மாணவர்கள் பெறும் வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement