dinamalar telegram
Advertisement

பராமரிப்பில்லாத அரசு கல்லுாரி

Share
திண்டிவனம்-ஒலக்கூர் அருகே ஓட்டு எண்ணும் மையத்திற்கு ஆய்வுக்குச் சென்ற கலெக்டர் கல்லுாரியை பராமரிப்பின்றி வைத்திருந்ததைப் பார்த்து டோஸ் விட்டதால் பரபரப்பு நிலவியது.உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஓட்டு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் நேற்று ஆய்வு செய்தார். ஒலக்கூர் வட்டாரம் மேல்பாக்கத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கல்லுாரியை, ஆய்வு செய்த போது, கணினி அறையில் மின்விளக்கு வசதி இல்லாதது மட்டுமின்றி மற்ற அறைகளிலும் முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாமல் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, அங்கு பணியில் இருந்தவர்களுக்கு டோஸ் விட்டதோடு, கல்லுாரி பொறுப்பாளரை இன்று 16ம் தேதி நேரில் வந்து சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement