dinamalar telegram
Advertisement

கவனமாக மனு தாக்கல் செய்யுங்கள்: கட்சியினருக்கு மாஜி அமைச்சர் அட்வைஸ்

Share
விழுப்புரம்-'தி.மு.க., ஆட்சியில் நியாயம், தர்மத்தை எதிர்பார்க்க முடியாது' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.உள்ளாட்சித் தேர்தலை யொட்டி, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட துணைச் செயலாளர் சக்கரபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம், தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மணியன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.தொடர்ந்து, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அணி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசுகையில், 'உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் தவறாக இருந்தால் கூட தேர்தல் அதிகாரிகள் அதையே சுட்டிக் காட்டி, நிராகரித்து விடுவர். தி.மு.க., ஆட்சியில் நியாயம், தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், சான்றுகளை சரிபார்த்து வழங்க வேண்டும். இல்லையெனில், நிராகரித்து நாம் நீதிமன்றம் சென்று வருவதற்குள் பணி காலமே முடிவடைந்து விடும்.தி.மு.க.,வை ஏன் ஆட்சியில் உட்கார வைத்தோம் என நினைத்து மக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களே தற்போது நினைக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சி சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள். தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., வெல்வது உறுதி.இவ்வாறு முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement