dinamalar telegram
Advertisement

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா

Share
திண்டிவனம்-திண்டிவனம் நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.செஞ்சி சாலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, நகர செயலாளர் தீனதயாளன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.விழுப்புரம் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் முகமது ெஷரீப், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், முன்னாள் நகர செயலாளர் கணேசன், ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், ரவி, ஐ.டி., பிரிவு செயலாளர் தினேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.விழுப்புரம்விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகம் அருகிலிருந்து ஊர்வலமாக கலைஞர் அறிவாலயம் வரை சென்றனர். பின், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர்.செஞ்சிநகர தி.மு.க., சார்பில் பஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணாதுரை சிலைக்கு அமைச்சர் மஸ்தான் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர் காஜா நஜீர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி அரங்க ஏழுமலை, வழக்கறிஞர் அணி மணிவண்ணன், தமிழ்ச்செல்வி, முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.வானுார்பி.டி.ஓ., அலுவலகத்தில் அண்ணா துரை சிலைக்கு சக்ரபாணி எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட ஜெ., பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேந்தன், அணி செயலாளர்கள் வீரப்பன், கார்த்திகேயன், உமாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.தியாகதுருகம்தியாகதுருகத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., மணிகண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் வேலு பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.தியாகதுருகம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம் சுந்தர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் பாஷா, அவைத்தலைவர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.விக்கிரவாண்டிநகர தி.மு.க., செயலாளர் நைனாமுகமது தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செல்வகுமார், முன்னாள் சேர்மன் அப்துல் சலாம், மலர்மன்னன், முன்னாள் துணை சேர்மன் சர்க்கார் பாபு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement