dinamalar telegram
Advertisement

கிரைம் செய்திகள்

Share
பைக் மோதி முதியவர் பலிதிருவெண்ணெய்நல்லுார்: மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 70; இவர், கடந்த 10ம் தேதி மேட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் சாலையோரமாக நடந்து சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு, நேற்று இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விஷம் குடித்து பெண் தற்கொலைவிக்கிரவாண்டி: பொன்னங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 45; இவரது மனைவி சுமதி, 40; இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுமதி கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மது கடத்தியவருக்கு வலைவிழுப்புரம்: வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் மருதப்பன், மாங்குப்பம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் நேற்று சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக மொபட்டில் வந்த நபர், வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடினார். மொபட்டில் புதுச்சேரி மது பாட்டில்கள் 100 இருந்தது தெரியவந்தது. உடன், மது பாட்டில்கள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.பெண் மாயம்: போலீஸ் விசாரணைசங்கராபுரம்: வடசிறுவளூர் காலனியைச் சேர்ந்தவர் வேலு மனைவி பார்வதி, 50; இவர், சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவரை கடந்த 13ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மினி லாரி மோதி ஒருவர் பலிசங்கராபுரம்: எஸ்.குளத்துாரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பன்னீர்செல்வம், 27; இவர், நேற்று முன்தினம் இரவு சங்கராபுரம் வந்தவர், தனது பல்சர் பைக்கில் எஸ்.குளத்துாருக்கு சென்று கொண்டிருந்தார். அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த மினி லாரி பைக்மீது மோதியது. இதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மணல் கடத்தியவருக்கு வலைவிழுப்புரம்: தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் ஆனாங்கூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மினி வேனில் மணல் கடத்தி வந்த நபர், போலீசை பார்த்ததும், வேனை நிறுத்திவிட்டு தப்பியோடினார். போலீசார் வழக்குப் பதிந்து மினி வேனை பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.தங்கை மாயம்: அண்ணன் புகார்திருவெண்ணெய்நல்லுார்: சின்னசெவலை அணைகட்டு சாலையைச் சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவரை கடந்த 10ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் அண்ணன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement