dinamalar telegram
Advertisement

தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டம்

Share
விழுப்புரம்-உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் கணபதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். மாநில விஜயகாந்த் மன்ற துணைச் செயலாளர் ராஜா சந்திரசேகர், பொருளாளர் தயாநிதி, துணைச் செயலாளர்கள் சுந்தரேசன், சூடாமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பேசுகையில், 'கருத்து வேறுபாடுகளை மறந்து, வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும்' என்றார்.மேலும், கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.தலைமை செயற்குழு விஜய பாலாஜி, ஜெயசீலன் உட்பட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement