dinamalar telegram
Advertisement

ஆன்லைனில் கலா உத்சவ் போட்டி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

Share
புதுச்சேரி-ஆன்லைன் வழியாக நடக்கும், 'கலா உத்சவ்' போட்டியில் பங்கேற்க, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மத்திய கல்வி அமைச்சகம், இடைநிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக் கொண்டு வரும் வகையில், 'கலா உத்சவ்' போட்டிகளை தேசிய அளவில் நடத்தி வருகிறது.இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் முறையில், கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.தனி நபர் (ஆண், பெண்) பிரிவில் வாய்ப்பாட்டு, நடனம், இசைகருவி மீட்டல், ஓவியம் உட்பட 9 பிரிவுகளில் 4 பிராந்தியங்களிலும் போட்டிகள் நடைபெற உள்ளது.இதில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலும், மாநில அளவில் முதலிடம் பெறுவோர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர். பள்ளிகளில் 9,10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, நோடல் அதிகாரி பாஸ்கரராசுவை 9442787052, 0413-2225751 என்ற தொலைபேசி எண்ணிலும், www.kalautsav.in, http://schooledn.puducherry.gov.in என்ற இணைய தளத்திலும் அறியலாம். புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில், அக்.,13ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்ப படிவங்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement