dinamalar telegram
Advertisement

மன அழுத்தம் குறைக்க சிறப்பு பயிற்சி

Share
புதுச்சேரி-காலாப்பட்டு சிறையில் கைதிகளின் மன அழுத்தம் குறைக்க, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.காலாப்பட்டு மத்திய சிறையில் 200க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக கைதிகள் பரோலில் வெளியே செல்வதும், உறவினர்களை சந்திக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடையும் கைதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.கைதிகளின் மன நிலையை மாற்றும் வகையில், அரபிந்தோ சொசைட்டி மற்றும் சிறைத்துறை நிர்வாகம் இணைந்து, புதிய நம்பிக்கை எனும் திட்டத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.அதன் தொடர்ச்சியாக, சிறை துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் உத்தரவின்பேரில், கைதிகளுக்கு 'ஆர்ட் தெரபி' பயிற்சி நடந்தது.இதில் கைதிகள் கலந்து கொண்டு, தங்களின் ஆழ்மனதில் புதைந்துள்ள எண்ணங்களை ஓவியங்களாக வரைந்து, அதன் மூலம் மன அழுத்தத்தை வெளிக் கொண்டு வந்தனர்.கைதிகளுக்கு மன நல ஆலோசனையும் வழங்கப்பட்டது.சிறை தலைமை கண்காணிப்பாளர் குமார், கண்காணிப்பாளர் பாஸ்கரன், அரபிந்தோ சொசைட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement