dinamalar telegram
Advertisement

புதுச்சேரி செவிலியர்களுக்கு புளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது

Share
புதுச்சேரி-புதுச்சேரி செவிலியர் அதிகாரி அனுராதா, கிராமப்புற செவிலியர் லதா ஆகியோருக்கு, 'புளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருதினை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறந்த சேவையாற்றும் செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்களை பாராட்டி, ஆண்டுதோறும், 'புளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதினை, மத்திய சுகாதாரத் துறை வழங்கி கவுரவித்து, வருகிறது.2020ம் ஆண்டுக்கான விருதுக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனை செவிலியர் அதிகாரி அனுராதா, 46; கரையாம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கிராமப்புற செவிலியர் லதா, 44; ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, காணொலி வாயிலாக, இவ்விருதுகளை நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அனுராதா, லதா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, மருத்துவ கண்காணிப்பாளர் செல்வேல், செவிலியர் சங்க நிர்வாகிகள் ஜானகி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement