dinamalar telegram
Advertisement

சட்டசபை தேர்தலில் காங்., தோல்வி ஏன்

Share
புதுச்சேரி-புதுச்சேரி காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.காங்., அலுவலகம் வந்த தினேஷ் குண்டுராவை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாநில காங்., தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், அவர்களை தனித்தனியே சந்தித்து பேசினார்.காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரை பிரதேச பொது செயலாளர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் அப்போது, சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கான காரணம், உள்ளாட்சி தேர்தல் பணிகள், கட்சியை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, கட்சி தலைவர் மாற்றம் குறித்து கேட்டார்அதற்கு, அமைச்சர், எம்.எல்.ஏ., பொறுப்பில் இருந்தவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளதால் கட்சியை பலப்படுத்த வேண்டியது அவசியம். மக்களை ஈர்க்கும் வகையில் கட்சித் தலைவரை நியமிக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்பவராக கட்சி தலைவர் இருக்க வேண்டும் என, நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்., வேட்பாளர்களிடமும் கருத்து கேட்டார்.ஒட்டுமொத்த நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், சட்டசபை தேர்தல் தோல்விக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமியே முழு காரணம் என குற்றம்சாட்டினர்.ஆட்சியில் இருந்தபோது, கட்சிக்கும், கட்சியினருக்கும் எதுவும் செய்யவில்லை. நிர்வாகிகளை அரவணைத்து செல்லவில்லை. காங்., தலைவரை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர். தேர்தல் செலவுக்கு கூட கட்சியில் இருந்து போதிய பணம் வழங்கவில்லை என்றனர்.சிலர், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர்.அதற்கு, கூட்டணி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம். கட்சி தலைமை அதை முடிவு செய்யும் என நிர்வாகிகளை குண்டுராவ் சமாதானம் செய்தார். அவர், நிர்வாகிகளுடன் இன்றும் கருத்து கேட்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement