dinamalar telegram
Advertisement

மீனவருக்கு நிவாரணம்

Share
புதுச்சேரி-இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்ட காரைக்கால் மீனவருக்கு, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆறுதல் கூறினார்.காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த செண்பகராமன், கடந்த 10 தினங்களுக்கு முன் கடலில் மீன் பிடிக்க சென்றார். அப்போது இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டு, காயமடைந்தார்.அவரை, மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் காரைக்காலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அமைச்சர் கூறும்போது, 'முதல்வருடன் கலந்து பேசி அவரது அனுமதியை பெற்று, பாதிக்கப்பட்ட மீனவருக்கு மீனவர் நலம் மற்றும் மீன் வளத் துறை சார்பில் நிவாரணம் வழங்கப்படும்' என தெரிவித்தார்.காரைக்கால் கலெக்டர் அர்ஜூன் சர்மா, முன்னாள் கவுன்சிலர் குமரன், அதிகாரிகள் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement