dinamalar telegram
Advertisement

கவர்னர் தமிழிசையுடன் ஆஸ்திரேலிய துாதர் சந்திப்பு

Share
Tamil News
புதுச்சேரி-தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய துாதர் சாரா கிர்லே, ராஜ்நிவாசில், கவர்னர் தமிழிசையை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.சந்திப்பின்போது, இருநாட்டு நல்லுறவுகள், கொரோனா மேலாண்மை, கல்வி மற்றும் ஆன்மிக சுற்றுலா வளர்ச்சிக்கான வாய்ப்புகள், கலாசார பரிவர்த்தனை, ஸ்மார்ட் சிட்டி, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, புதுச்சேரி அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள், மத்திய அரசின் ஒத்துழைப்பை கவர்னர் தமிழிசை விரிவாக எடுத்துக் கூறினார்.புதுச்சேரியில் தொழில் முதலீடு செய்யவும், சுற்றுலா மற்றும் கல்வி வளர்ச்சிக்கான உதவிகளை ஆஸ்திரேலியா செய்யும் என கோன்சல் ஜெனரல் உறுதியளித்தார்.இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஆஸ்திரேலியாவில் கலாசார சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்த புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய துாதர் கேட்டுக்கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement