dinamalar telegram
Advertisement

அபாயம்; ஊசுட்டேரி கரையில் கொட்டப்படும் நச்சு மண்ணால்...பல்லுயிர் பெருக்க சூழலுக்கு அச்சுறுத்தல்

Share
Tamil News
திலாசுப்பேட்டையில் கனகன் ஏரி உள்ளது. இதன் அருகில், அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.கவர்னராக இருந்த கிரண்பேடியின் நடவடிக்கையால், கனகன் ஏரியை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதை அமைத்து, படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் உரிய பராமரிப்பு இல்லாததால், தற்போது படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.கனகன் ஏரியில் அடிக்கடி மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்தன. ஏரியின் அருகில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் மீன்கள் செத்து மிதந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.காரணம் என்ன?அதன்பேரில் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், ஏரியில் இருந்து தண்ணீரையும், செத்து மிதந்த மீன்களையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.ஆய்வு முடிவில், ஏரி தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததால் மீன்கள் செத்து மிதந்தது தெரிய வந்தது.மேலும், நச்சுத்தன்மை உள்ள அமோனியம், நைட்ரேட் அதிக அளவில் ஏரிக்கு அடியில் படர்ந்துள்ளது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து, கனகன் ஏரியில் உள்ள நச்சு தன்மையுள்ள மண், கடந்த சில வாரங்களாக துார்வாரி, அகற்றப்பட்டு வருகிறது.இந்த நச்சு மண், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுட்டேரி கரையோரம் கொட்டப்பட்டு வருவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.நச்சு தன்மையுள்ள மண் ஊசுட்டேரி கரையில் கொட்டுவததால், மழைக்காலங்களில் கரைந்து ஏரிக்கு சென்று சேரும். இது, பறவைகள் மட்டுமின்றி பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். கனகன் ஏரிக்கு நேர்ந்த கதிதான் ஊசுட்டேரிக்கும் ஏற்படும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.மேலும், கனகன் ஏரி போன்று ஊசுட்டேரியையும் ஆபத்தில் தள்ளக் கூடாது. உடனடியாக ஊசுட்டேரி பகுதியில் நச்சு மண் கொட்ட அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.நச்சுத்தன்மை கொண்ட மண்ணை ஊசுட்டேரி கரையோரம் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.என்ன செய்யலாம்புதுச்சேரியில் மனை வாங்கிய பலர், வீடு கட்டாமல் காலி மனைகளாக வைத்துள்ளனர்.இந்த காலிமனைகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த காலி மனைகளை நிரப்பும் வகையில், கனகன் ஏரி மண்ணை அவர்களுக்கு விற்கலாம்.இதற்காக சிறு தொகை வசூலிக்கலாம். இதன் மூலம் பொதுப்பணித் துறைக்கு வருமானம் கிடைப்பதோடு, காலி மனைகளில் தண்ணீர் தேங்குவதும் தடுக்கப் படும்.ஊசுட்டேரியின் சிறப்பு என்னபுதுச்சேரி மாநிலத்தின் மிகப் பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியான ஊசுட்டேரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. 850 ஹெக்டேரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி, புதுச்சேரி பகுதியில் 390 ஹெக்டேரில் அமைந்துள்ளது.ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 15.54 சதுர கிலோ மீட்டர் ஆகும்.ஏரிக்கரையின் மொத்த நீளம் 7.28 கி.மீ., ஊசுட்டேரி, 2008ம் ஆண்டு புதுச்சேரி அரசாலும், 2014ம் ஆண்டு தமிழக அரசாலும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர் ஏரியாக உள்ளது. ஊசுட்டேரிக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக நவம்பர் மாதம் வருகின்றன.

இங்கு முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, பின்னர் அவைகளையும் அழைத்துக் கொண்டு தாய்நாடு திரும்புகின்றன.உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி, மத்திய ஆசியா, ஐரோப்பிய கண்டங்களில் இருந்தும், சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் எண்ணற்ற பறவையினங்கள் நவம்பர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை புதுச்சேரி யின் ஊசுட்டேரிக்கு வலசை வருகின்றன.ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 130 வகையான பறவைகள் இந்த ஏரிக்கு வந்து செல்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement