dinamalar telegram
Advertisement

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மனு தாக்கல்

Share
புதுச்சேரி-புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான மனு தாக்கல் நேற்று துவங்கியது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.அ.தி.மு.க. சார்பில், புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம், வரும் அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனையொட்டி, இப்பதவிக்கான தேர்தல் வரும் அக்., 4ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி அறிவித்தது.தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலர் முனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இத் தேர்தலுக்கான மனு தாக்கல், சட்டசபை வளாகத்தில் உள்ள செயலர் அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது.நேற்று, சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன்,41; என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.தேர்தல் ஆணைய விதிமுறைப்படி சுயேச்சையாக மனு தாக்கல் செய்பவரை, 10 எம்.எல்.ஏ.,க்கள் முன் மொழிய வேண்டும். ஆனால்,இவரை யாரும் முன்மொழியவில்லை. தனி ஆளாக வந்து, ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி மனு தாக்கல் செய்தார். இருவர், மனுக்கள் மட்டும் வாங்கிச் சென்றனர்.வரும் 22ம் தேதி வரை மனு தாக்கல் நடக்கிறது. மறுநாள் 23ம் தேதி பகல் 12.00 மணிக்கு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.27ம் தேதி மாலை 3:00 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். மாலை 3:00 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.போட்டி இருப்பின், வரும் அக்., 4ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.இத்தேர்தலில், ஆளும் கட்சியான என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணியில், எந்த கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்துவது என்பதில் இரு கட்சிகளிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது.இரு கட்சிகளும், பதவியை பிடித்திட பல்வேறு வகையில் காய் நகர்த்தி வருகின்றன.இந்நிலையில், வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக பா.ஜ., மேலிட பார்வையாளரான நிர்மல்குமார் சுரானா ஓரிரு தினங்களில் புதுச்சேரிக்கு வர உள்ளார்.தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் என்.ஆர்.காங்., தலைமையுடன் பேசிய பிறகே, வேட்பாளர் இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement