dinamalar telegram
Advertisement

முதியோருக்கு சேவை உதவி மையம் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

Share
புதுச்சேரி-மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, ஹெல்பேஜ் இந்தியா சார்பில், முதியோர் சேவை உதவி மையத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.தேசிய அளவில் 14567 என்ற இலவச தொலைபேசி எண் கொண்ட, முதியோர்களுக்கான உதவி மையம் நேற்று துவங்கப்பட்டது.14567 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளும் முதியோருக்கு வழிகாட்டுதல், சட்ட சேவை, ஓய்வூதிய சேவை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார் ஆகியோர், இந்த உதவி மையத்தை துவக்கி வைத்தனர். சமூக நலத்துறை செயலர் உதயகுமார், இயக்குநர் பத்மாவதி, ஹெல்பேஜ் இந்தியா நிறுவன வேணுகோபால் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசுகையில், 'இந்த உதவி மையம், முதியோருக்கு இருக்கும் மன மற்றும் உடல் சங்கடங்களை தீர்க்கும் வாய்ப்புள்ளது. உதவி செய்ய ஒரு அமைப்பு உள்ளது என்ற எண்ணமே முதியோருக்கு உள்ள அச்சத்தை போக்கிவிடும்' என குறிப்பிட்டார்.அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேசும்போது, 'நாம் நமது கலாசாரத்தை இழந்து நிற்கிறோம். இதனால்தான் முதியோர் இல்லங்கள், அமைப்புகள் ஏற்பட காரணமாக உள்ளது. கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில் எந்த கவலையும் இல்லாமல் இருந்தோம்.எனவே அவற்றை மீட்டெடுக்க வேண்டும். இதுகுறித்து முதியோர், இளைஞர்களிடம் எடுத்துக்கூற வேண்டும் . இது நமது கடமையாகும். துரித உணவுகளை தவிர்த்து, பாரம்பரிய உணவுகளை உட்கொண்டால் 100 வயதிற்கு மேல் வாழலாம் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement