dinamalar telegram
Advertisement

முத்தியால்பேட்டையில் இன்று போக்குவரத்து மாற்றம்

Share
புதுச்சேரி-கோவில் விழாவையொட்டி, முத்தியால்பேட்டை காந்தி வீதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.போக்குவரத்து (கிழக்கு) எஸ்.பி., முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள பொன்னு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 10.௦௦ மணி முதல் 11.30 வரை நடைபெற உள்ளது. அதையொட்டி, காந்தி வீதியில், காலை 7.௦௦ மணி முதல் மதியம் 12.30 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காலாப்பட்டு வழியாக புதுச்சேரி வரும் அனைத்து விதமான பஸ்கள், கனரக வாகனங்கள் இ.சி.ஆர் வழியாக புதுச்சேரிக்கு வரவேண்டும்.அஜந்தா சிக்னல் வழியாக வரும் அனைத்து விதமான பஸ்கள், கனரக வாகனங்கள் அண்ணா சாலை 45 அடி சாலை வழியாக செல்ல வேண்டும்.முத்தியால்பேட்டை வழியாக செல்ல வேண்டிய டவுன் பஸ்கள், ரூட் பஸ்கள் புது பஸ் நிலையத்திலிருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம், இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம் வழியாக செல்ல வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement