dinamalar telegram
Advertisement

போக்குவரத்து துறையில் பேன்சி எண்கள் ஏலம்

Share
புதுச்சேரி-போக்குவரத்து துறையில், வாகனங்களுக்கான பேன்சி பதிவெண்கள், வரும் 24ம் தேதி வரை, இணையதளம் மூலமாக ஏலம் விடப்படுகிறது.போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி போக்குவரத்து துறையில், பிஒய்-01-விடி (காட்டுக்குப்பம்) வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில்ஏலம் விடப்பட உள்ளது.இந்த ஏலம், நாளை (17ம் தேதி) முதல் 24ம் தேதி மாலை 4:30 வரை நடைபெறும்.ஏலத்தில் பங்கேற்க தேவையான பெயர், கடவு சொல்லை (பாஸ் வேர்டு) https://parivahan.gov.ih//fancy என்ற இணையதளத்தில், நாளை துவங்கி 23ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.ஏல நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நாளை முதல் https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத் தொகை, இ.எம்.டி., உள்ளிட்ட விபரங்களை போக்குவரத்து துறை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement