dinamalar telegram
Advertisement

கோவில் நகர திட்டப்பணி

Share
காரைக்கால்-திருநள்ளாறு கோவில் நகரத் திட்டத்தின் கீழ் ஆன்மிக பூங்கா பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்தார்.திருநள்ளாறில் கோயில் நகர திட்டப் பணி, மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் ரூ.7.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோயில் நகர திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆன்மிக பூங்கா, சனீஸ்வர பகவான் ஆலயத்தைச் சுற்றி நான்கு வீதிகளிலும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் லட்சுமி நாராயணன், பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொகுதி எம்.எல்.ஏ.,சிவா உடனிருந்தார்.துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர். செயற்பொறியாளர் வீரசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement