dinamalar telegram
Advertisement

இலங்கை அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு

Share
புதுச்சேரி-காரைக்கால்- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து, புதுச்சேரி முதல்வருடன் இலங்கை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.இலங்கை பிரதமரின் இணைப்பு செயலர் செந்தில் தொண்டைமான், ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர், அரசு முறைப் பயணமாக நேற்று புதுச்சேரி வந்தனர்.இருவரும், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.அப்போது, இலங்கை மற்றும் காரைக்கால் மீனவர்கள் பிரச்னைக்கு சுமூக தீர்வு கண்டு நல்லுறவை வளர்ப்பது. காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement