dinamalar telegram
Advertisement

ஓசி பீர் வாங்கித் தர மறுத்த டிரைவர் மண்டை உடைப்பு

Share
வில்லியனுார்--வில்லியனுார் அருகே, 'ஓசி'யில் பீர் வாங்கித் தர மறுத்ததால், டிரைவரின் மண்டையை உடைத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.வில்லியனுார் அடுத்த அரியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் ராஜா, 37. புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் அரியூரில் உள்ள தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த செந்தில், அன்பு ஆகியோர் பீர் வாங்கி கொடுக்குமாறு ராஜாவிடம் கேட்டனர். அவர், தன்னிடம் பணம் இல்லை என கூறினார்இதனால் கோபமடைந்த செந்தில், ஆபாசமாக திட்டி, அருகே இருந்த பீர் பாட்டிலை எடுத்து, ராஜாவின் தலையில் தாக்கினார். மேலும், வலது கையில் பாட்டிலால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதில் தலையில் படுகாயமடைந்த ராஜா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றறார்.புகாரின் பேரில் செந்தில், அன்பு மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement