dinamalar telegram
Advertisement

பண்டக கண்காணிப்பாளராக 3 பேருக்கு பதவி உயர்வு

Share
புதுச்சேரி-பண்டக காப்பாளர், தணிக்கையாளருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.நலவழித் துறையில் பணியாற்றும் பண்டக காப்பாளர் சிவராமனுக்கு பண்டக கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து, மின் துறைக்கு இட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.ஆதிதிராவிடர் நலத்துறை பண்டக காப்பாளர் கந்தசாமிக்கு, பண்டக கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து, வேளாண் துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.கணக்கு மற்றும் கருவூலத் துறை பண்டக தணிக்கையாளர் சோமுவுக்கு, பதவி உயர்வு அளித்து, பண்டக கண்காணிப்பாளராக நலவழித்துறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நிதித் துறை சார்பு செயலர் கோவிந்தராஜன் பிறப்பித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement