dinamalar telegram
Advertisement

நத்தமேட்டில் தீ விபத்து

Share
புதுச்சேரி-நெட்டப்பாக்கம் அருகே நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் நத்தமேடு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி; கூலி தொழிலாளி. இவரது குடிசை வீடு நேற்று முன்தினம் இரவு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நெட்டப்பாக்கம், திருபுவனை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.எனினும், வீடு முழுவதும் எரிந்ததுடன், அருகில் இருந்த வேல்முருகன், ரவி, முனியம்மாள், மல்லிகாம்பாள், சிவபாக்கியம் ஆகியோரது குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது.இதில், வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள், உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement