dinamalar telegram
Advertisement

சபாநாயகர்கள் மாநாடு

Share
புதுச்சேரி-இந்திய மற்றும் ஆசிய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு, காணொலி வாயிலாக நேற்று நடந்தது.அனைத்து மாநிலங்களின் சபாநாயகர்கள் மாநாடு, கடந்த 1921ம் ஆண்டு செப்., 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், சிம்லாவில் நடந்தது.அந்த நிகழ்வின் நுாற்றாண்டை கொண்டாடும் வகையில், காணொலி மூலம் அனைத்து இந்திய மற்றும் ஆசிய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நேற்று நடந்தது.இந்திய சபாநாயகர் ஓம்பிர்லா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது; புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம். புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26ம் தேதி துவங்கியது. ஜனநாயக மாண்பை போற்றும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் பேச போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டது. சபையில் 33 உறுப்பினர்களில் 16 பேர் புதியவர்கள். விவாதங்களின்போது புதிய உறுப்பினர்களை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மிகுந்த கவனத்துடனும், மரியாதையுடனும் ஊக்கப்படுத்தினர். சட்டசபை கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் செயல்பாடு பாராளுமன்ற மாண்பை உயர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement