dinamalar telegram
Advertisement

கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது

Share
புதுச்சேரி-லாஸ்பேட்டை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை இ.சி.ஆரில் ரோந்து சென்றனர்.மவுடுப்பேட் சந்திப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு பெண் உள்பட 2 பேரிடம் விசாரித்தனர். அவர்களை சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த ஸ்டாலின், 39, பெரியார் நகரை சேர்ந்த நாகராணி,39, என்பதும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வருவதும் தெரிந்தது. அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement