dinamalar telegram
Advertisement

மின்துறை ஊழியரிடம் ரூ.1.50 லட்சம் அபேஸ்

Share
பாகூர்-பைக்கில் வைத்திருந்த, ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை, திருடிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியகோவிலை சேர்ந்தவர் ருத்திரகுமார், 50; மின் துறை ஊழியர். இவர் நேற்று காலை 10.30 மணியளவில், கிருமாம்பாக்கம் இந்தியன் வங்கியில் இருந்து மகளின் கல்வி செலவிற்காக, ஒன்றரை லட்சம் ரூபாய் எடுத்தார். பணத்தை தனது சுசூகி அக்சஸ் பைக் சீட்டின் கீழே உள்ள டிக்கியில் வைத்து பூட்டிவிட்டு, பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.விசாரணையில், வங்கியில் இருந்து பணத்துடன் வந்த ருத்திரகுமாரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், ஜெராக்ஸ் கடைக்கு சென்ற போது, அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement