dinamalar telegram
Advertisement

நகை, பணம் திருட்டு

Share
புதுச்சேரி-மருத்துவமனை எதிரே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டியில் இருந்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கூனிமேட்டை சேர்ந்தவர் முராஜ். இவரது மனைவி பிரமிளாதேவி, 34. இவர், புதுச்சேரி ரோமன் ரோலன்ட் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்க்க நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் சென்றார்.மருத்துவமனை எதிரே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்தபோது, ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் மணி பர்சில் வைத்திருந்த ௬ கிராம் நகை மற்றும் 15 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement