dinamalar telegram
Advertisement

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிவைப்பு

Share
புதுடில்லி: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


டில்லியில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் சார்பாக, எதிர்கால விண்வெளி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ககன்யான் திட்டத்தின் கீழ், 2022ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், 2022 இறுதியில் அல்லது 2023ல், ககன்யான் திட்டத்தில் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.


நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவு நாடுகள் இந்தியாவுடன் இணைந்து விண்வெளி தொழில்நுட்ப தீர்வுகளை தரவும், புதிய பொருட்கள் கண்டுபிடிப்பில் ஈடுபடவும் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    மொதல்லே கோவி்ட்டிலிருந்து மனிதனைக் காப்பாத்துங்க.

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    மக்கள் வரிப்பணதை வீணடிக்காதீர்கள். உலக விளையாட்டுப் போட்டிகளில் நாம் எப்போது முதல் 10 இடங்களுக்குள் வருகிறோமோ அன்றுதான் இந்தியாவுக்கு மரியாதை கிடைக்கும். அகாசுகா அல்ட்டாப் வேலைகளைச் செய்து நம் பெருமையை உயர்த்திக்கொள்ள முடியாது.

  • Arun, Chennai. - chennai,இந்தியா

    ரஷ்யா இருக்கறவரைக்கும் நமக்கு கவலையில்லை.. மனச தளரவிடாம முயற்சி செஞ்சுக்கிட்டே இருங்க. எப்படியும் இரண்டாயிரத்து நூத்தி இருவத்துக்குள்ள நிலாவுல கால வச்சுறலாம்.. என்ன ஒன்னு அங்க நம்மள வரவேற்க பிலிபைன்ஸ், கென்யா, நேபால்னு குட்டி நாட்டுகாரங்க கூட இருப்பாங்க

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    தற்போது பங்களா, அப்புறம் யோசிக்கலாம்கலாம். /

  • அப்புசாமி -

    காசு... துட்டு... நஹி.. நஹி..

Advertisement