dinamalar telegram
Advertisement

சிறுமியை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Share
கடலுார்-திட்டக்குடி அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு கடலுார் போக்சோ கோர்ட்டில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன் மகன் சின்னதுரை, 22; இவர் 15 வயது பத்தாம் வகுப்பு படித்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பழகியுள்ளார். அதோடு தற்கொலை செய்துகொள்வதாக கூறி, கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.கடந்த 2019 ஏப்., 12ல், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியை பைக்கில் கடத்திச்சென்றார்., சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் தங்க வைத்து, மறுநாள் சென்னைக்கு அழைத்துச்சென்றார்.சிறுமியை கடத்தி செல்வதற்கு, சின்னதுரையின் நண்பர்களான கீழ் ஆதனுார் மாயவேல் மற்றும் செவ்வேரி பிரதாப், சரத்பாபு ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.இதனை அறிந்த, சிறுமியின் பெற்றோர், திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து, 15ம் தேதி தொழுதுார் பஸ் நிலையத்தில் நின்றிருந்த சின்னதுரையை கைது செய்தனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மாயவேல், பிரதாப், சரத்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், கடலுார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரணை முடிந்த நிலையில், மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த சின்னதுரைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். மேலும், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள் படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம், 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மாயவேல், பிரதாப், சரத்பாபு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜரானார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement