dinamalar telegram
Advertisement

இளம்பெண் மர்மசாவு வழக்கில் குடும்பத்தினரை விசாரிக்க உத்தரவு

Share
வேப்பூர்-வேப்பூர் அருகே இளம் பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கில், அவரது குடும்பத்தினரை விசாரிக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பா.கொத்தனுாரைச் சேர்ந்தவர்கள் முனியன், 33, அனிதா, 30. இவர்கள் காதலித்து கடந்தாண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். சென்னை, ஒரக்கடத்தில் வசித்தனர்.அனிதாவின் அண்ணன் ஆனந்தவேல் வீட்டிற்கு அழைத்ததால், கடந்த 13ம் தேதி பா.கொத்தனுாரிலுள்ள அவரது வீட்டிற்கு அனிதா வந்தார். வீட்டில் அனிதா இறந்து கிடந்ததை தொடர்ந்து, இறுதி சடங்கு செய்து, சடலத்தை சுடுகாட்டில் எரித்தனர்.அனிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் முனியன் புகார் கொடுத்தார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.தகவலறிந்த எஸ்.பி., சக்திகணேசன் நேற்று வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, வழக்கு விபரங்கள், நடவடிக்கைகளை போலீசாரிடம் கேட்டறிந்தார். பின், பகல் 1.15 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி., அனிதாவின் தாய் களியம்மாள் மற்றும் அண்ணி அம்சாவிடம் விசாரித்தார்.அனிதா இறந்து 4 மணி நேரத்திற்குள் சடலத்தை எரித்தது ஏன் எனவும், மர்மமான முறையில் பெண் இறந்தது குறித்து போலீசாரிடம் தகவல் கூறாதது ஏன் என கேட்டார். இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அனிதாவின் குடும்பத்தினர் மீது சந்தேகம் ஏற்படுவதாகவும், அவர்களிடம் விசாரணை செய்ய போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.அப்போது, திட்டக்குடி டி.எஸ்.பி., சிவா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் சந்திரா, தனிப்பிரிவு போலீசார் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement