dinamalar telegram
Advertisement

போன் டவர் அமைப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி

Share
விழுப்புரம்-விழுப்புரம் அருகே மொபைல் போன் டவர் அமைப்பதாகக் கூறி வாலிபரிடம் பணம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சிறுவாலை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன், 36; இவரை கடந்தாண்டு செப்டம்பர் 20ம் தேதி அறிமுகம் இல்லாத நபர் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.மேலும், உங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எங்கள் நிறுவன மொபைல் போன் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளோம். அதற்கு முன்பணமாக 25 லட்சம் ரூபாயும், மாத வாடகை 30 ஆயிரம் ரூபாய் தருகிறோம்.அதற்கு நீங்கள் எங்கள் நிறுவன உயர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.இதை நம்பிய மணிகண்டன், அந்த நபர் கூறியதன் பேரில் கடந்தாண்டு செப்டம்பர் 24ம் தேதியில் இருந்து அக்டோபர் 1ம் தேதி வரை 6 தவணைகளாக ஒரு லட்சத்து 1,500 ரூபாயை வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.அதன் பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த மணிகண்டன் நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement