dinamalar telegram
Advertisement

அணையில் மீன்பிடி திருவிழா 15 பேர் மீது வழக்குப் பதிவு

Share
கள்ளக்குறிச்சி,-மணிமுக்தா அணை மீன்பிடி திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி மீன்களை பிடித்தது குறித்து 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் கடந்த ஆண்டு மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மீன்கள் வளர்ச்சியடைந்த பின், குத்தகைதாரர்கள் பிடித்து விற்பனை செய்தனர்.மணிமுக்தா அணை தற்போது தண்ணீர் வற்றி வரும் நிலையில் மீன்பிடி திருவிழா நடப்பதாக சுற்று வட்டார கிராமங்களில் நேற்று முன்திம் இரவு தகவல் பரவியது.இதையொட்டி, சூளாங்குறிச்சி, அகரகோட்டாலம், வாணியந்தல், பழைய சிறுவங்கூர், ரங்கநாதபுரம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்கள், சிறியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று அதிகாலை 5:30 மணியளவில் மணிமுக்தா அணையில் திரண்டனர்.கொரோனா தொற்று பரவலை மறந்து, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியின்றி, அணையில் இறங்கி ஒன்று கூடி மீன்களைப் பிடித்தனர். கட்லா, கெளுத்தி, விரால், ஜிலேபி, கண்ணாடிகெண்டை உட்பட பல்வேறு ரக மீன்களைப் பிடித்து மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர்.கொரோனா தொற்று ஏற்படும் வகையில், அனுமதியின்றி கூட்டம் கூட்டியதற்காக, மீனவர் சங்கத் தலைவர் சங்கராபுரத்தைச் சேர்ந்த மணி, அகரகோட்டாலத்தைச் சேர்ந்த பிச்சை, குச்சிக்காட்டைச் சேர்ந்த முருகன் உட்பட 15 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement